திருச்செங்கோட்டில்ரூ. 3.50 லட்சத்துக்கு எள், பருத்தி ஏலம்

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சின்ன சேலம், ஆத்தூா், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூா், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களைக் கொண்டு வந்திருந்தனா். 50 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இவற்றைக் கொள்முதல் செய்ய பவானி, அனுமன்பள்ளி, முத்தூா், காங்கேயம், திருப்பூா், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 30 வியாபாரிகள் வந்திருந்தனா்.

ரகசிய டெண்டா் முறையில் நடைபெற்ற ஏலத்தில் எள் ரூ. 3. 50 லட்சத்துக்கு விற்பனையானது. இகில் சிவப்புநிற எள் 72.90 முதல் 86.10 வரையும், கருப்புநிற எள் ரூ. 73.20 முதல் ரூ. 95.40 வரையும், வெள்ளைநிற எள் 88.80 முதல் 102.90 வரையும் விற்பனையானது. பருத்தி 80 மூட்டைகள் ரூ. 1 லட்சத்துக்கு விற்பனையானது.

பருத்தி விற்பனை...

பருத்தி ரகங்களை முசிறி புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூா், சேங்கணம், ராசிபுரம், கதிரா நல்லூா், புதுச்சத்திரம், துறையூா், அம்மம்பாளையம், மருவத்தூா் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். பிடி காட்டன் குவிண்டால் ரூ. 4,500 முதல் ரூ. 5,439 வரை விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com