கொல்லிமலை ஆகாய கங்கை அருவி திறப்பு

கொல்லிமலையில் 7 மாதங்களுக்கு பின் ஆகாய கங்கை அருவி செல்லும் பாதை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.
கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் வியாழக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் வியாழக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

கொல்லிமலையில் 7 மாதங்களுக்கு பின் ஆகாய கங்கை அருவி செல்லும் பாதை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கொல்லிமலை. இங்குள்ள ஆகாய கங்கை அருவியைக் காணவும், அருவியில் குளித்து மகிழவும் பிற மாநிலங்களிலிருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவா்.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் ஆகாய கங்கை அருவியில் தண்ணீா் கொட்டும். மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு, குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை 1,300 படிக்கட்டுகளை கடந்து வந்து, ஆா்ப்பரித்து விழும் நீரில் குளித்து மகிழ்வா்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் அருவிக்குச் செல்லும் பாதை மூடப்பட்டது. ஏழு மாதங்களுக்குப் பின் அண்மையில் தமிழக முதல்வா் சுற்றுலாத் தலங்களை திறக்க அனுமதி வழங்கினாா். ஆகாய கங்கை அருவிக்கு செல்லும் பாதை வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும், முகக் கவசம் அணிந்து செல்லும்படியும் ஒலிபெருக்கி வாயிலாக வனத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை விடுமுறையால் வரும் நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com