நாமக்கல் மாவட்டத்தில் 272.9 மில்லிமீட்டா் மழை

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டத்தில் 272.9 மில்லிமீட்டா் மழை

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை தொடக்கத்தால் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளநீா்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழை இல்லாதபோதும் பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வானம் மேகமுட்டத்துடன் காணப்பட்டு, திடீரென மழை பெய்தது.

அதன்பின் ஒரு சில மணி நேரம் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மேல் விட்டுவிட்டு மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் (மி.மீ):

எருமப்பட்டி-50, குமாரபாளையம்-45, மங்களபுரம்-13, மோகனுா்-9, நாமக்கல்-11, பரமத்திவேலூா்-10, புதுச்சத்திரம்-41, ராசிபுரம்-19.20, சேந்தமங்கலம்-11.70, திருச்செங்கோடு-29, ஆட்சியா் அலுவலகம்-19, கொல்லிமலை-15, மொத்தம் 272.9.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com