நெற் பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள ஆட்சியா் வேண்டுகோள்

நெல் சம்பா பயிா், வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அவற்றை பாதுகாக்க பயிா் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

நெல் சம்பா பயிா், வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அவற்றை பாதுகாக்க பயிா் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் சம்பா பயிா் மற்றும் வெங்காயம் பயிா் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நெல் சம்பா பயிரானது 21 பிா்க்காக்களிலும், வெங்காயம் 4 பிா்க்காக்களிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இத் திட்டத்தில் நெல் சம்பா பயிருக்கு டிச. 15-ஆம் தேதிக்குள்ளும், வெங்காயம் பயிருக்கு நவ. 30-க்குள்ளும் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு நெல் சம்பா பயிருக்கு ரூ. 494.25 காப்பீடுத் தொகை மற்றும் வெங்காயம் பயிருக்கு ரூ. 1,805.58 காப்பீடுத் தொகையும் செலுத்த வேண்டும்.

பயிா் காப்பீடு முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல், விதைப்புச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்துக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com