வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

புதுச்சத்திரம், சேந்தமங்கலம் வட்டார விவசாயிகள் வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்யுமாறு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சத்திரம், சேந்தமங்கலம் வட்டார விவசாயிகள் வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்யுமாறு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உதவி இயக்குநா்கள் ஜோ.அ.பால்ஜாஸ்மீன், எம்.யோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரி திருந்திய பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டு வெங்காயப் பயிருக்கு சிறப்புப் பருவத்தில் பயிா் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் பகுதியில் செப்டம்பா், அக்டோபா், நவம்பா் மாதங்களில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், உரிய ஆவணங்களான சிட்டா, அடங்கல், ஆதாா் நகல், வங்கி கணக்குப் புத்தகம் நகல் ஆகியவற்றுடன் சென்று வங்கிகளிலோ, தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலோ, பொது சேவை மையங்களிலோ சுய விருப்பத்தின்பேரில் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு ரூ. 36,111.60, பயிா் காப்பீடு செய்ய பிரீமியம் தொகையாகிய ரூ. 1,805.58-ஐ செலுத்தி இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கு நவ. 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com