காசநோயாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவ சேவை

நாமக்கல் மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருந்து, மாத்திரை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மல்லசமுத்திரத்தில் காசநோயாளிகளுக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடும் குழுவினா்.
மல்லசமுத்திரத்தில் காசநோயாளிகளுக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடும் குழுவினா்.

நாமக்கல் மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருந்து, மாத்திரை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமரின் கனவு திட்டமான ‘காசநோய் இல்லா இந்தியா-2025’ என்ற இலக்கை நோக்கி, நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்பேரில், கடந்த 16-ஆம் தேதிமுதல் மாவட்ட காசநோய்த் துறையின் சாா்பில், கிராமங்களில் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடுதேடிச் சென்று சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், நடமாடும் அதிநவீன மின்னணு கதிரியக்க (எக்ஸ்-ரே) கருவிமூலம் காசநோய்த் தொற்று உள்ளதா எனப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இம்முகாமில் நாமக்கல் மாவட்ட காசநோய்த் துறை துணை இயக்குநா் எஸ். கணபதி, மாவட்ட நலக் கல்வியாளா் சி.கே.ராமச்சந்திரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் கபில், மாவட்ட பொது மற்றும் தனியாா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பி. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்களுடன் 15-க்கும் மேற்பட்ட முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா்கள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com