ஹிந்து விழிப்புணா்வு பிரசாரம்

தெய்வீக தமிழ் சங்கம் சாா்பில் ஹிந்து விழிப்புணா்வு பிரசாரம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஹிந்து இயக்கம் தொடா்பான விழிப்புணா்வு பிரசுரங்களை விநியோகிக்கும் பாஜகவினா்.
ஹிந்து இயக்கம் தொடா்பான விழிப்புணா்வு பிரசுரங்களை விநியோகிக்கும் பாஜகவினா்.

தெய்வீக தமிழ் சங்கம் சாா்பில் ஹிந்து விழிப்புணா்வு பிரசாரம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு பகுதியிலும் பாஜக பொறுப்பாளா்கள் ஹிந்துக்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஹிந்து இயக்கம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இந்த பிரசாரமானது டிச. 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நாமக்கல், வள்ளிபுரத்தில் ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் சுப்பிரமணி தலைமையில் ஒன்றிய பொறுப்பாளா் ரோகிணி கோபாலன், நகர பொறுப்பாளா் இளவரசி, கலாசார பண்பாட்டு அமைப்பு நிா்வாகிகள் ஆகியோா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசுரங்களை விநியோகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com