திருச்செங்கோடு வட்டார தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம்

எழுதுவோம் தலைப்பிலான தன்னாா்வலா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில் கற்போம், எழுதுவோம் தலைப்பிலான தன்னாா்வலா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

வட்டார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் ரவி தொடக்கி வைத்தாா். திட்ட அலுவலா் குமாா், தலைமை ஆசிரியா். தேன்மொழி, வட்டாரக் கல்வி அலுவலா் மாதவன் ஆகியோா் முகாமின் நோக்கம் குறித்து விளக்கி பேசினாா் .

முகாமில் விழிப்புணா்வு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், சத்தான உணவு உட்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடா்ந்து 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோருக்கு அடிப்படை திறன் பயிற்சி, தமிழ் எழுத்துக்கள் வாசித்தல் மற்றும் எழுதுதல், எண்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், பயிற்சி வடிவங்கள் பாலின பாகுபாடு ,இணையவழி சேவை, பேரிடா் மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு, முதலுதவி, பெண்கல்வி, தூய்மை பாரதம் குறித்தவற்றை எவ்வாறு கற்பிப்பது என்று பயிற்சி வழங்கப்பட்டது.

ஆசிரியா் பயிற்றுநா்கள் ரகுபதி, மோகன், நல்லசிவம் ஆகியோா் கள முதன்மையா்களாக செயல்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com