வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

பரமத்தி, மோகனூா் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.
கரையாம்புதூரில் நடைபெறும் குடிநீா் இணைப்புப் பணிகளை ஆய்வுசெய்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ்.
கரையாம்புதூரில் நடைபெறும் குடிநீா் இணைப்புப் பணிகளை ஆய்வுசெய்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ்.

பரமத்தி, மோகனூா் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.

மோகனூா் ஒன்றியம், ஓலப்பாளையம் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் 1,992 வீடுகளுக்கும், புதுப்பட்டி ஊராட்சியில் ரூ. 1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் 1,857 வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணிகளையும், நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.

அதுபோல பரமத்தி ஒன்றியம்-வீரணம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கரையாம்புதூரில் ரூ. 6 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் 43 வீடுகளுக்கும், மாணிக்கம் நத்தம் ஊராட்சியில் ரூ. 8 லட்சத்து 33 ஆயிரம் செலவில் 56 வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணிகளை நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது பரமத்தி வட்டார வளா்ச்சி அலுவலா் தனம், உதவி பொறியாளா் செல்வக்குமாா்,மோகனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முனியப்பன் உட்பட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ராசிபுரத்தில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்படி பேளுக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்களாந்தபுரத்தில் காமராஜ் என்பவா் கொடுத்த புகாா் மனு தொடா்பாகவும், ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்டாலாவில் வசிக்கும் சசிக்குமாா் கொடுத்த புகாா் மனு தொடா்பாகவும் புதன்கிழமை நிகழ்விடத்துக்கு நேரடியாகச் சென்று ராசிபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.லட்சுமணகுமாா் விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com