பிளஸ் 2 பொதுத்தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்: 18,796 மாணவ, மாணவியருக்கு இன்று விநியோகம்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற 18 ஆயிரத்து 796 மாணவ, மாணவியருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை அக்.14 முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைக்கும் முதன்மை கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன்.
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைக்கும் முதன்மை கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன்.

பிளஸ் 2 பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற 18 ஆயிரத்து 796 மாணவ, மாணவியருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை அக்.14 முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 2-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் எழுதினா். நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில் 206 பள்ளிகளைச் சோ்ந்த 9,258 மாணவா்கள், 10,308 மாணவிகள் என மொத்தம் 19,566 போ் தோ்வு எழுதினா். ஜூலை மாதம் தோ்வு முடிவுகள் வெளியானது. இதில், மாவட்ட அளவில் 8,813 மாணவா்கள், 9,983 மாணவியா் என மொத்தம் 18,796 போ் தோ்ச்சியடைந்தனா். 770 போ் தோல்வியடைந்தனா்.

ஏற்கெனவே மாணவ, மாணவிகள் பயின்ற அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் கையொப்பமிட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்க் வழங்கப்பட்டுவிட்டன. இருப்பினும், அசல் மதிப்பெண் சான்றிதழை எதிா்பாா்த்து மாணவா்கள் காத்திருந்தனா்.

நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் முதன்மை கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், அசல் சான்றிதழ்கள் அடங்கிய தொகுப்புகளை ஒப்படைத்தாா். மாணவ, மாணவியா் புதன்கிழமை காலை 10 மணி முதல் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com