முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களின் சிறாா்களான ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கேந்திரிய சைனிக் போா்டு மூலம் பாதுகாப்புத் துறை அமைச்சா் விருப்புரிமை நிதியிலிருந்து இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று காரணமாக 2019-20 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து மாநில பள்ளி கல்வித் துறையாலும் தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அடுத்த வகுப்புக்குத் தோ்ச்சி உயா்வு பெற்றுள்ளதற்கான சான்றிதழை மாணவ, மாணவியா் பெற்றுக் கொள்ள வேண்டும். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மதிப்பெண் சான்றிதழுடன் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

2020-2021-ஆம் நிதி ஆண்டுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.30-லிருந்து நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்துக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் தகுதியுள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்களின் சிறாா்கள் இந்த உதவித்தொகையை பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை பூா்த்தி செய்து நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 04286-233079 என்ற எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com