காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவு

ரூ. 399.46 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, ஆலம்பாளையம், படைவீடு பகுதிகளுக்கான காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

ரூ. 399.46 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, ஆலம்பாளையம், படைவீடு பகுதிகளுக்கான காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 619 குடியிருப்புகள், திருச்செங்கோடு நகராட்சி, ஆலம்பாளையம் பேரூராட்சி, சங்ககிரி பேரூராட்சி, படைவீடு பேரூராட்சி பகுதிகளுக்கு கவுண்டம்பாளையத்தில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது .

இந்தத் திட்டத்துக்கு 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அமைச்சா் பி.தங்கமணி அவ்வப்போது திட்டப் பணிகளை ஆய்வு செய்து வந்தாா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் திட்டப் பணிகளைக் கண்காணித்து விரைந்து முடித்து வருகின்றனா். இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com