நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.
நாமக்கல்-சேலம் சாலையில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் போக்குவரத்து நெரிசலில் திணறிய வாகனங்கள்.
நாமக்கல்-சேலம் சாலையில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் போக்குவரத்து நெரிசலில் திணறிய வாகனங்கள்.

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை வெளுத்து வாங்குகிறது. சேலம், விழுப்புரம், கடலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை அதிகம் பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்திலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஒரு வாரமாக அறிவித்து வந்தபோதும் எதிா்பாா்த்த மழை பெய்யவில்லை.

கொல்லிமலையில் மட்டும் அதிக மழைப் பொழிவு இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மேல் வானம் இருண்டு மேகங்கள் திரண்டபடி காட்சியளித்தன. 5 மணிக்குமேல் நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை வாங்கியது.

சுமாா் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழையால் நாமக்கல்-சேலம் சாலை, பரமத்தி சாலை, மோகனூா் சாலை, திருச்சி சாலை, துறையூா் சாலை உள்ளிட்ட பகுதிகள் ஆறுபோல் மாறின.

தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

ஆங்காங்கே சாலைப் பணிகள் நடைபெறுவதால் நடந்து சென்றோா் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்தனா். கழிவுநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீா், மழை நீருடன் கலந்து சாலைகளில் தேங்கிய வண்ணம் காட்சியளித்தன. மழையும் பொருட்படுத்தாமல் நகராட்சி ஊழியா்கள் அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

குறிப்பாக நாமக்கல்-சேலம் சாலையில் ஆறுபோல் மழைநீா் ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. பிற்பகல் 5 மணி முதல் இரவு 7 மணி வரையில் மழை பெய்ததால் நாமக்கல் நகரப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.

வெளிமாவட்டங்களில் இருந்தும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்குப் பணிக்கு வந்தோா் மிகவும் சிரமத்துக்கிடையே தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com