செப். 14 முதல் வட்டாட்சியா் அலுவலகங்களில் குறைதீா்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் செப்டம்பா் 14-ஆம் தேதி முதல் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் செப்டம்பா் 14-ஆம் தேதி முதல் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வரும் 14-ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்கிழமை அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை ஆட்சியா் நிலையில் உள்ள அலுவலா்களிடம் மனுவை அளிக்கலாம்.

வட்ட வாரியாக மனுக்கள் பெறும் அலுவலா்கள் விவரம்:

நாமக்கல்-வருவாய் கோட்டாட்சியா், சேந்தமங்கலம்- உதவி ஆணையா் (கலால்), குமாரபாளையம்- டாஸ்மாக் பொது மேலாளா், ராசிபுரம்- மாவட்ட வழங்கல் அலுவலா், திருச்செங்கோடு-வருவாய் கோட்டாட்சியா். மோகனூா்- மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா். கொல்லிமலை- பழங்குடியினா் நலத்துறை திட்ட அலுவலா். பரமத்திவேலூா்- மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா்.

பொதுமக்கள் தங்களது மனுக்களை  இணையதள வழியாகவும், 1800-425-1997 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com