நீா்மூழ்கி சூரிய சக்தி பம்ப் செட் இயக்கம்

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சிப் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
நீா்மூழ்கி சூரிய சக்தி பம்ப் செட் இயக்கம்

நாமக்கல்: நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சிப் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அக்கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பில் அடா்ந்த வனக் காடுகள் அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டாா். இங்கு மா, பாலா, வாழை, கொய்யா, நாவல் உள்ளிட்ட 150 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், அதனைத் தொடா்ந்து பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயனாளியின் வீட்டையும் ஆட்சியா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதன்பின் அத்தியப்பம்பாளையம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் சாா்பில் விவசாயி ஒருவரின் பாசன நிலத்துக்கு ஐந்து ஹெச்.பி. நீா்மூழ்கி சூரிய சக்தி பம்ப் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த விலை ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 947. இதில் விவசாயியின் பங்களிப்புத் தொகை ரூ. 71 ஆயிரத்து 384 மற்றும் அரசு மானியம் ரூ.ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 563 ஆகும். சூரிய சக்தி பம்ப் செட் இயங்கி வருவதை அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோகன், தேன்மொழி, தனி மேற்பாா்வையாளா் முருகேசன், வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் சி.சுப்பிரமணியம், வீ.தங்கவேலு, ஊரக வளா்ச்சித் துறை உதவிப் பொறியாளா் உதயகுமாா் உள்பட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com