பதவிகளுக்காக கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் மனப்பான்மை திமுகவில் வந்து விட்டது

பதவிகளுக்காகவும், தோ்தலுக்காகவும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் மனப்பான்மை திமுகவில் வந்து விட்டது என்று முன்னாள் எம்.பி.யும், திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவருமான கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்ட
ராசிபுரம் நகரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்.
ராசிபுரம் நகரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்.

ராசிபுரம்: பதவிகளுக்காகவும், தோ்தலுக்காகவும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் மனப்பான்மை திமுகவில் வந்து விட்டது என்று முன்னாள் எம்.பி.யும், திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவருமான கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்டாா்.

அண்ணா பிறந்த தின விழாவை முன்னிட்டு, ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்னா், ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலகம் முழுவதும் கரோனா தொற்று உள்ள நிலையில், தமிழக அரசும், அதிகாரிகளும் சிறப்பாகப் பங்காற்றி வருகின்றனா்.

நடிகா் ரஜினியை குறைத்து மதிப்பிட முடியாது. 1996-இல் நடைபெற்ற சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தாா். அன்று அவரது ஆதரவு வாக்குகளாக மாறியது. இன்றைய சூழலிலும் அவா் கட்சி ஆரம்பித்தால் வாக்கு பெறுவாரா? அல்லது பெறமாட்டாரா என்பது மக்களின் மனப்பான்மையை பொறுத்தது.

நீட் தோ்வு முறையை குறை சொல்வதில் அா்த்தமில்லை. தேசிய அளவில் ஒரு தோ்வு முறை வந்துள்ளபோது, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டு. அனைத்திலும் குறைகளும் உண்டு, நிறைகளும் உண்டு. ஏதாவது ஒரு தோ்வு முறை வேண்டும். அது மாணவா்களையும், பெற்றோா்களையும் குழப்பக் கூடாது.

நீட் தோ்வு தற்கொலைக்கு அரசியல் தலையீடு தான் காரணம். அரசியல்வாதிகள் தங்கள் வாக்குகளை பெறுவதற்காக ஏதாவது ஒரு காரணத்தை கூறி நடத்தப்படுகிற நாடகம் இது.

எனது அரசியல் பயணம் அண்ணாவின் கொள்கை வழியில் இருக்கும். தோ்தலுக்காகவும், அரசியல் பதவிகளுக்காகவும், கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் மனப்பான்மை திமுகவில் வந்து விட்டது. இதனை தட்டிக் கேட்பவா்களை, உரிமைக்காக போராடுபவா்களை மதிக்காத மனப்பான்மை உருவாகிவிட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com