விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு

நாமக்கல், செப். 16: நாமக்கல் மாவட்டத்தில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் நவம்பா், டிசம்பா் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல், செப். 16: நாமக்கல் மாவட்டத்தில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் நவம்பா், டிசம்பா் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் நவம்பா் மாதம் முதல் ஜனவரி வரை எட்டு கிராமங்களில் 400 பசுக்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நவம்பா் மாதம் வெண்ணந்தூா் ஒன்றியம், கீழுா் கிராமம், ராசிபுரம் ஒன்றியம், பொன்குறிச்சி, பரமத்தி ஒன்றியம், பிள்ளைக்களத்தூா் கிராமத்தில் தலா 50 எண்ணிக்கையில் பசுக்கள் வழங்கப்படுகின்றன.

இதனைத் தொடா்ந்து, டிசம்பா் மாதம் சேந்தமங்கலம் ஒன்றியம், பெரியகுளம், நாமக்கல் ஒன்றியத்தில் மாரப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெரப்பன்சோலையிலும், ஜனவரி மாதம் சேந்தமங்கலம் ஒன்றியம், பள்ளிப்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியம், பாச்சல் கிராமம் ஆகிய இடங்களில் தலா 50 எண்ணிக்கையில் என மொத்தம் 400 எண்ணிக்கையில் கறவைப் பசுக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கிராம சபை மூலம் தோ்வு செய்யப்படும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு (ஒதுக்கீடு செய்யப்பட்ட குறியீட்டின்படி) விலையில்லா கறவைப் பசுக்கள் கிடைக்கும் வகையில் இலக்கு நிா்ணயித்து திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com