நாமக்கல்லில் 108 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,898-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல், செப். 18: நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,898-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 3,790 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 2,950 போ், உயிரிழந்த 55 போ் தவிா்த்து, மீதமுள்ள 892 போ் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில், மாவட்டம் முழுவதும் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 68 போ் ஆண்கள், 40 போ் பெண்கள் ஆவா். அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஒருவா் உயிரிழப்பு: ராசிபுரம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த 50 வயது ஆண், கரோனா பாதிப்புக்குள்ளாகி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 56-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com