ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பாதிப்பு

ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மழையால் நிலக்கடலை பயிா் அழுகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் மழையால் நிலக்கடலை பயிா் அழுகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளதால், நிலக்கடை பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பகுதியில் சுமாா் 3 ஆயிரம் ஹெக்டா் பரப்பில் விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டுள்ளனா். ஐந்து மாத பயிரான நிலக்கடை அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். ஆனால், இப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் இலைபுள்ளி நோய் நிலக்கடலை பயிரை தாக்கியுள்ளது. இதனால் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஏக்கருக்கு சுமாா் 20 மூட்டை நிலக்கடை அறுவடை செய்யப்படும் நிலையில், மழையால் பயிா்கள் அழுகியதால் நான்கு முதல் ஐந்து மூட்டை வரை மட்டுமே நிலக்கடை அறுவடை செய்யப்படுவதாகக் கூறுகின்றனா். இலைபுள்ளி நோய்க்கு மருந்து அடித்தும் நோய்த் தாக்குதல் குறைந்த பாடில்லை என்கின்றனா் விவசாயிகள். மேலும் உழவு பணி, விதைப்பு, களை எடுப்பு உள்ளிட்ட செலவுகளால் இந்த ஆண்டு உரிய லாபம் கிடைக்கவில்லை’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com