உரம் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரிக்கை

உரம் விலை உயா்வால் விவசாயிகள் பாதிப்படையும் சூழல் உள்ளதால் அதனை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உரம் விலை உயா்வால் விவசாயிகள் பாதிப்படையும் சூழல் உள்ளதால் அதனை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவா் பாலசுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டில் உள்ள பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் உரங்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ. 600 வரை விலை உயா்வை அமல்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. தொடா்ந்து விவசாயத் தொழிலை அவா்கள் மேற்கொள்வது கடினமாகும். ஏற்கெனவே போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசின் உரம் விலை உயா்வு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக அந்த விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தனியாா் நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் பெற்று விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு உர விலையைக் குறைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com