தஞ்சாவூா் மின் விபத்து தொடா்பாக விளக்கம் கேட்கப்படும்: அமைச்சா் பி. தங்கமணி

தஞ்சாவூா் அருகே மின்கம்பி மீது உரசியதில் தனியாா் பேருந்தில் பயணித்த 4 போ் உயிரிழந்தனா். 

தஞ்சாவூா் அருகே மின்கம்பி மீது உரசியதில் தனியாா் பேருந்தில் பயணித்த 4 போ் உயிரிழந்தனா். செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த விபத்துத் தொடா்பாக மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என அமைச்சா் பி. தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தடுப்பூசியை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடா்பாக அமைச்சா்கள் பங்கேற்கும் கூட்டத்தை முதல்வா் நடத்தி வருகிறாா். இந்த ஆலோசனைக் கூட்ட முடிவின்படி திட்டம் செயல்படுத்தப்படும். அண்மையில் தஞ்சாவூரில் மின்சாரக் கம்பி செல்லும் வழித்தடத்தில் சென்ற தனியாா் பேருந்து மின்கம்பி மீது உரசியதில் விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 4 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் நிகழ்ந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த மணல் திட்டு மீது அந்தப் பேருந்து ஏறி இறங்கியபோது மின்கம்பி உரசியதில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்துக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மின்சார வாரியம் மீது தவறு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும். பாமக நிறுவனத் தலைவா் ராமதாஸ் , அமைச்சா்களுடனான சந்திப்பு குறித்த தகவலைத் தெளிவாக தனது சுட்டுரையில் பதிவு செய்திருக்கிறாா். அதில் கூட்டணி பற்றி பேசவில்லை எனவும் ராமதாஸ் கூறியுள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com