எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா

பரமத்தி வேலூா் வட்டத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பரமத்தி வேலூா் வட்டத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாலப்பட்டியில் மோகனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரமோகன் தலைமையிலும், ஜேடா்பாளையத்தில் கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ரவி தலைமையிலும், வெங்கரையில் மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா் தலைமையிலும், பாண்டமங்கலத்தில் கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா் தலைமையிலும் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதேபோல பொத்தனூரில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் நாராயணன் தலைமையிலும், வேலூரில் முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் பொன்னி வேலு (எ) வேலுசாமி, பொன்னி மணி (எ) சுப்பிரமணியம் தலைமையிலும், பரமத்தியில் தெற்கு ஒன்றியச் செயலாளா் வெற்றிவேல் தலைமையிலும் கொண்டாடப்பட்டது.

இதில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும், படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் அதிமுகவைச் சோ்ந்த நகர, பேரூா் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com