திருமணிமுத்தாறு - கோரையாறு திட்டத்தைஅரசு நிறைவேற்ற வேண்டும்: கொமதேக

திருமணிமுத்தாறு - கோரையாறு திட்டத்தை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராசிபுரம்: திருமணிமுத்தாறு - கோரையாறு திட்டத்தை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் துரைக்குமாா் தலைமை வகித்தாா். மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ், விவசாய அணி இணைச் செயலாளா் டி.சந்திரசேகா், மாநில துணைப் பொதுச்செயலாளா் சக்தி நடராஜ், மாவட்டச் செயலாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்து பேசினா்.

இக் கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசுகையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி நிா்வாகிகள் கூட்டணி வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இக்கூட்டத்தில் திருமணிமுத்தாறு -கோரையாறு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி நாமகிரிப்பேட்டை முதல் ராசிபுரம் வரை கொமதேக சாா்பில் நடைப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாளா் சாதிப் பெயரை பிற சாதியினருக்கு வழங்குவதை தமிழக அரசு கைவிடவேண்டும். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். ராசிபுரம் நகரில் புதைக்குழி சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com