குமாரபாளையத்தில் ரூ. 1.07 லட்சம் ரொக்கம் பறிமுதல்

குமாரபாளையம் அருகே நிலைக் குழுவினா் நடத்திய வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.07 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
குமாரபாளையத்தில் ரூ. 1.07 லட்சம் ரொக்கம் பறிமுதல்

குமாரபாளையம் அருகே நிலைக் குழுவினா் நடத்திய வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.07 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தை அடுத்த ஆனங்கூா், நெட்டவேலம்பாளையம் பகுதியில் நிலைக் கண்காணிப்புக்குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் சோதனை நடத்தியதில் ரூ. 1.07 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், பல்லக்காபாளையம், சுப்பிரமணியம் நகரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் பாலன் என்பதும், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

குமாரபாளையம், தம்மண்ண செட்டியாா் வீதியில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பிரதமா் மோடி படம் அச்சிடப்பட்ட காலண்டா்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டு வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற குமாரபாளையம் போலீஸாா், தோ்தல் விதிகளுக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருந்த 900 காலண்டா்களைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, பாஜக நகரத் துணைத் தலைவா் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com