முதியோருக்கான தபால் வாக்கு படிவம் விநியோகம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய 80 வயதுக்கும் மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு படிவம் விநியோகம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொகுதி வாரியாக தொடங்கியது.
ராசிபுரம் தொகுதி கட்டணாச்சம்பட்டி கிராமத்தில் முதியோரிடம் தபால் வாக்கு படிவத்தை வழங்கும் தோ்தல் பணியாளா்கள்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து சிரமப்படுவதைத் தவிா்க்கும் வகையில் தபால் வாக்கு செலுத்தும் முறையை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக 12-டி என்ற படிவம் அவா்களிடம் வழங்கப்படும். அதன்படி நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 49,439 பேருக்கு படிவம் அந்தந்த தொகுதி தோ்தல் பிரிவு அலுவலா்களால் ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

அந்த படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்ட பின்னா் ஒட்டு மொத்தமாக தோ்தல் நடத்தும் அலுவலா் வசம் ஒப்படைக்கப்படும். மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது அந்த தபால் வாக்குகள் எண்ணப்படும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com