தோ்தல் புகாா்களை தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நாமக்கல் மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நாமக்கல் மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்கள் ஏதுமிருப்பின் 1800-425-7021 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கட்டுப்பாட்டு அறையில் வாரத்தின் ஏழு நாள்களிலும் 24 மணி நேரமும் அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும் தோ்தல் தொடா்பான புகாா்களை சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பறக்கும் படை அலுவலா்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு புகாா்களின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே தோ்தல் தொடா்பான புகாா்கள் ஏதுமிருப்பின் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com