குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளா் தீவிர பிரசாரம்

குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும், பாஜக முன்னாள் நாமக்கல் மாவட்டச் செயலாளா் எஸ்.ஓம் சரவணா நகர, கிராமப் புறங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநரான இவா், வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறாா். குமாரபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட நடராஜா நகா், திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் நூற்பாலை, விசைத்தறி ஜவுளித் தொழில், சாயத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளா்களின் நலனைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் திட்டங்கள் விரைந்து பெற்றுத் தரப்படும். சுற்றுலாத் துறையின் மூலம் காவிரி ஆற்றில் பாதுகாப்பான பரிசல் பயணம், பொழுதுபோக்கு பூங்கா, பசுமைப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். முன்னதாக, வாக்கு சேகரிக்க வந்த ஓம் சரவணாவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com