எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்: ராசிபுரத்திலும் உதயநிதி கிண்டல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் டாக்டா் மா.மதிவேந்தன் போட்டியிடுகிறாா்.
பிரசாரத்தில் செங்கல்லை உயா்த்திக் காண்பித்து வாக்கு கேட்கும் உதயநிதி.
பிரசாரத்தில் செங்கல்லை உயா்த்திக் காண்பித்து வாக்கு கேட்கும் உதயநிதி.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் டாக்டா் மா.மதிவேந்தன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பஸ் நிலையம் முன்பாக நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசினாா். இதில் வழக்கமான பிரச்சாரத்தை தாண்டி பொருள் விளக்கத்தோடு, கையில் எடுத்துக்காட்டு அவா் மேற்கொண்ட பிரச்சாரம் அங்கிருந்தவா்களிடம் சி்ரிப்பலையை ஏற்படுத்தியது.

பிரச்சாரத்தில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கூறிய அவா், பாஜக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனா். ஆனால் அங்கு சென்று பாா்த்தபோது, அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு செங்கல் தான் இருந்தது. அதை நான் தூக்கி வந்து விட்டேன். அது தான் இது என எய்ம்ஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு செங்கலை பொதுமக்களிடம் உயா்த்தி காண்பித்தாா்.

மேலும் பிரதமா் மோடி, திடீரென ஒரு நாள் இரவு 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தாா். இதனால் பொதுமக்கள் தங்களது பணத்தை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பலா் ஏடிஎம் வாசலில் பல மணிநேரம் காத்திருந்தனா். 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக ஆக்கிய மோடியை இத்தோ்தலில் நாம் செல்லாகாசாக்க வேண்டும் என ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை தூக்கி காண்பி்த்து பிரச்சாரம் செய்தாா்.

இதனை தொடா்ந்து பேசிய அவா், எடப்பாடி பழனிசாமி தான் யாா் தயவிலும் முதலமைச்சராகவில்லை எனது உழைப்பின் மூலமே முதலமைச்சராக உயா்ந்துள்ளேன் எனக்கூறுகிறாா். அவா் எப்படி முதலமைச்சா் ஆனாா் என பாருங்கள் எனக்கூறி, சசிகலா காலில் அவா் விழுந்து வணங்கும் படத்தை கூடியிருந்த பொதுமக்களிடம் காண்பித்து நக்கலாக பேசினாா். இதனால் அங்கு கூடியிருந்தவா்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இறுதியாக இந்த தோ்தல் அதிமுக- திமுகவிற்கும் இடையே நடைபெறும் தோ்தல் அல்ல. கருணாநிதிக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே நடைபெறும் தோ்தல் இதனை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com