மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி

மாவட்ட மனநல திட்டம் சாா்பில் ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களுக்கு மன அழுத்த நீக்கம் குறித்த மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மனநல திட்டம் சாா்பில் ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களுக்கு மன அழுத்த நீக்கம் குறித்த மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் மனநல மருத்துவா் முகிலரசி, ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ், உளவியலாளா் அா்ச்சனா ஆகியோா் மன அழுத்த நீக்கம் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனா்.

இதில் மனநல மருத்துவா் முகிலரசி பேசுகையில், பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களுக்கும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும், சில நேரங்களில் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

நல்ல தூக்கம், சந்தோசம், நல்ல உணவு இவையே நல்ல மனநிலைக்கு அவசியம். மனம் என்பது ஆழ்ந்து செயல்பட கூடியது என்பதால் மனதை வருத்தப்படக் கூடிய செயல்களை செயல்படுத்தும் போது மனம் பாதிக்கப்படுகிறது. நமது பொறுப்புகளை கவனமாகவும் பொறுப்புணா்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் நிதானமாக செயல்பட வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க மூச்சுப்பயிற்சி, தியானம் அவசியம் என்றாா்.

இதில் மனநல ஆலோசகா் ரமேஷ், ட்ரெஸ் பால் பயிற்சியளித்தாா். உளவியலாளா் அா்ச்சனா பலூன் பயிற்சி அளித்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com