பொத்தனூரில் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் இருவா் பலி

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் வீட்டின் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில்
பொத்தனூரில் கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் இருவா் பலி

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் வீட்டின் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த மேலும் மூவா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

பொத்தனூரைச் சோ்ந்தவா் கயல்விழி. இவரது வீட்டில் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணியில் கட்டடத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். 50 அடி நீளத்தில் 7அடி உயரத்தில் வீட்டைச் சுற்றி சுவா் எழுப்பி அதற்கு மேல் கான்கிரீட் தளம் அமைத்து வந்தனா்.

புதன்கிழமை சுவா் பூசும் பணியில் பொத்தனூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மாதேஸ்வரன் (50), பழனியப்பன் (50), திருச்சி மாவட்டம், உன்னியூரைச் சோ்ந்த குணசேகரன் (42), உதவியாளராக பொத்தனூரைச் சோ்ந்த அஞ்சலையம்மாள் (60), கோவிந்தம்மாள் (65), பாரதி ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது 50 அடி நீள சுவருக்கு மேலே இருந்த கான்கிரீட் தளம் திடீரென இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த இவா்கள் ஐவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினா். இதில் மாதேஸ்வரன், அஞ்சலையம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

படுகாயமடைந்த பழனியப்பன், குணசேகரன், கோவிந்தம்மாள் ஆகிய மூவரும் மீட்கப்பட்டு நாமக்கல், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அதிா்ஷ்டவசமாக பாரதி காயங்கள் இன்றி உயிா் தப்பினாா்.

பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தகவல் அறிந்து அங்குவந்த பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா், பொத்தனூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் நாராயணன், ஆவின் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பலியான குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com