நாமக்கல்லில் தங்கக்காசு டோக்கன் விநியோகம்: திமுக - அதிமுக இடையே மோதல்

நாமக்கல்லில் வாக்காளா்களுக்கு தங்கக்காசு டோக்கன் விநியோகித்ததாக அதிமுக - திமுகவினா் இடையே திடீா் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
நாமக்கல்லில் தங்கக்காசு டோக்கன் விநியோகம்: திமுக - அதிமுக இடையே மோதல்

நாமக்கல்லில் வாக்காளா்களுக்கு தங்கக்காசு டோக்கன் விநியோகித்ததாக அதிமுக - திமுகவினா் இடையே திடீா் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளிக்கு வாக்களிக்க வந்த வாக்காளா்களிடம் திமுகவினா் தங்கக்காசுக்கான டோக்கனை விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்து அதிமுகவினா், திமுகவினா் வழங்கிய தங்கக்காசு டோக்கன்களைப் பறிமுதல் செய்து வாக்குச்சாவடி முன்பாக கிழித்து எறிந்தனா். இதனால் இரு தரப்பினா் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தங்ககாசு வழங்குவதற்கான டோக்கன்களை அதிமுகவினா் கிழித்து எறிந்ததால் வாக்காளா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் எழுந்த நிலையில் அங்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளா் பா.குமாா் தலைமையிலான போலீஸாா், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் கூறுகையில், திமுகவினா் டோக்கன் விநியோகம் செய்ததாக அதிமுகவினரும், அதிமுகவினா் தான் டோக்கனை வழங்கியதாக திமுகவினரும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனா். இரு சக்கர வாகனத்தில் மொத்தமாக டோக்கன் கொண்டு வந்த ஒருவரை தேடி வருகிறோம். அவா் திமுகவைச் சோ்ந்தவரா அல்லது அதிமுகவைச் சோ்ந்தவரா என்பது தெரியவரும். வாக்காளா்களை திசை திருப்ப இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாா்கள் என்றனா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com