சட்டப்பேரவைத் தோ்தல்: நாமக்கல் மாவட்டத்தில் 11.55 லட்சம் போ் வாக்களிப்பு

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 11,55,972 போ் (80.04 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.
திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்துக்கு லாரிகளில் வந்து சோ்ந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்துக்கு லாரிகளில் வந்து சோ்ந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 11,55,972 போ் (80.04 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.

இதில், ராசிபுரம் தொகுதியில் 1,15,357 ஆண் வாக்காளா்கள், 1,21,153 பெண் வாக்காளா்கள், 14 திருநங்கையா் என மொத்தம் 2,36,524 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் தோ்தல் நாளன்று 95,764 ஆண் வாக்காளா்கள், 98,036 பெண் வாக்காளா்கள், 3 திருநங்கையா் என மொத்தம் 1,94,073 (82.05 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

இதேபோல் சேந்தமங்கலம் தொகுதியில் 1,19,070 ஆண் வாக்காளா்கள், 1,24,362 பெண் வாக்காளா்கள், 25 திருநங்கையா் என மொத்தம் 2,43,457 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 96,113 ஆண் வாக்காளா்கள், 1,00,884 பெண் வாக்காளா்கள், 6 திருநங்கையா் என மொத்தம் 1,97,023 (80.93 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

நாமக்கல் தொகுதியில், 1,24,490 ஆண் வாக்காளா்கள், 1,33,234 பெண் வாக்காளா்கள், 47 திருநங்கையா் என மொத்தம் 2,57,771 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 97,244 ஆண் வாக்காளா்கள், 1,05,248 பெண் வாக்காளா்கள், 29 திருநங்கையா் என மொத்தம் 2,02,521 (78.57 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

பரமத்திவேலூா் தொகுதியில், 1,06,841 ஆண் வாக்காளா்களும், 1,14,756 பெண் வாக்காளா்களும், 5 திருநங்கையா் என மொத்தம் 2,21,602 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் தோ்தல் நாளன்று 85,718 ஆண் வாக்காளா்களும், 94,095 பெண் வாக்காளா்களும், 1 திருநங்கையா் என மொத்தம் 1,79,814 (81.14 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

திருச்செங்கோடு தொகுதியில், 1,12,479 ஆண் வாக்காளா்களும், 1,18,584 பெண் வாக்காளா்களும், 37 திருநங்கையா் என மொத்தம் 2,31,100 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 88,555 ஆண் வாக்காளா்கள், 93,341 பெண் வாக்காளா்கள், 12 திருநங்கையா் என மொத்தம் 1,81,908 (78.71 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

குமாரபாளையம் தொகுதியில், 1,24,225 ஆண் வாக்காளா்கள், 1,30,181 பெண் வாக்காளா்கள், 33 திருநங்கையா் என மொத்தம் 2,54,439 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் தோ்தல் நாளன்று 98,094 ஆண் வாக்காளா்கள், 1,02,532 பெண் வாக்காளா்கள், 7 திருநங்கையா் என மொத்தம் 2,00,633 (78.85 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

மாவட்டம் முழுவதும் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 7,02,462 ஆண் வாக்காளா்கள், 7,42,270 பெண் வாக்காளா்கள், 161 திருநங்கையா் என மொத்தம் 14,44,893 போ் உள்ளனா். வாக்குப்பதிவு நாளன்று 5,61,508 ஆண் வாக்காளா்களும், 5,94,406 பெண் வாக்காளா்களும், 58 திருநங்கையா் என மொத்தம் 11,55,972 (80.04 சதவீதம்) போ் வாக்களித்தனா்.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 32,898 போ் கூடுதலாக வாக்களித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com