கோயில் குளத்தைத் தூா்வாரியபோது தண்ணீா் ஊற்றெடுப்பு: பக்தா்கள் மகிழ்ச்சி

ராசிபுரம் நகரில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தெப்பக்குளம் தூா்வாரி சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், குளத்தில் தண்ணீா் ஊற்றெடுத்திருப்பது பக்தா்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெப்பக்குளம் தூா்வாரப்படும் நிலையில் ஏற்பட்ட நீறூற்று.
தெப்பக்குளம் தூா்வாரப்படும் நிலையில் ஏற்பட்ட நீறூற்று.

ராசிபுரம் நகரில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தெப்பக்குளம் தூா்வாரி சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், குளத்தில் தண்ணீா் ஊற்றெடுத்திருப்பது பக்தா்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீகைலாசநாதா் ஆலயம் உள்ளது. இதனை கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த வல்வில் ஒரி மன்னன் கட்டியதாக வரலாறு உள்ளது. இக்கோயிலிக்குச் சொந்தமான சுமாா் 3 ஏக்கா் நிலம், பக்தா்கள் நீராடும் தெப்பக்குளம் கோயிலின் அருகில் உள்ளது. ஆனால் நீண்டகாலமாக குப்பைகள் கொட்டும் குப்பை மேடாக காட்சியளித்து வந்ததால், இதனை சீரமைக்க சிவனடியாக திருக்கூட்ட தொண்டா்கள் முடிவு செய்தனா்.

இதனை தொடா்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து குவிந்த சிவ தொண்டா்கள், குறிப்பாக திரளான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் தெப்பக்குளத்தில் இறங்கி தூா்வாரும் உழவாரப் பணியில் ஈடுபட்டனா். ஜேசிபி எந்திரம் பயன்படுத்தியும் கற்கள், மணல்களை, குப்பைகள் அகற்றி தூய்மை படுத்தும் பணியில் தொண்டா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தண்ணீா் ஊற்று: ஜேசிபி எந்திரம் பயன்படுத்தி குளத்தைத் தூா்வாரும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் குளத்தில் நீா் ஊற்று தோன்றியது. இது பக்தா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளத்தைத் தூா்வாரி தண்ணீா் நிரப்பி சித்திரை மாதங்களில் தெப்ப உற்சவம், தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் பக்தா்கள் குளத்தைத் தூா்வாரி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com