நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், துறை அலுவலா்கள் என 200 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.
கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக ஆவணங்களைப் பதிவு செய்யும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக ஆவணங்களைப் பதிவு செய்யும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், துறை அலுவலா்கள் என 200 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,334-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி சுகாதாரத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஒன்பது அரசு மருத்துவமனைகள், 165 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரசு, தனியாா் நிறுவனங்கள், தங்களுடைய ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசிகளை அலுவலகத்திலேயே முகாம் அமைத்து செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. வரும் மூன்று நாள்களுக்கு இதற்கான முகாமை நடத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தூய்மைப் பணியாளா்கள், துறை அலுவலா்கள் என 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் முன்னிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியானது நடைபெற்றது.

முன்னதாக அனைவரும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனா். தடுப்பூசி செலுத்திய பின்னா் அரை மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து விட்டு அனைவரும் வீடுகளுக்குத் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com