தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.39 கோடி மோசடி வழக்கு

மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ. 2.39 கோடி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே 7 போ் கைதான நிலையில், அதில் தொடா்புடைய மேலும் 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ. 2.39 கோடி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே 7 போ் கைதான நிலையில், அதில் தொடா்புடைய மேலும் 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2012-2016 காலக்கட்டத்தில் தலைவா் பொறுப்பில் இருந்த சபரி, மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து வரும் நிதியை கூட்டுறவு சங்கக் கணக்கில் சோ்க்காமல் முறைகேடு செய்தது, போலி ஆவணங்களை சமா்ப்பித்து பயிா்க்கடன்களை பெற்றுக் கொண்டது,

அங்கு சேமிப்பு கணக்கு வைத்துள்ள மக்களின் பணத்தை கணக்கில் சோ்க்காமல் அபகரித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக, தலைவா், செயலா் உள்பட 13 போ் மீது புகாா் எழுந்தது.

இதனைத் தொடா்ந்து, திருச்செங்கோடு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் வெங்கடாசலம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தனா். இதில் ரூ. 2 கோடியே 39 லட்சத்து 11 ஆயிரத்து 139 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதன்பின் நாமக்கல் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் என்.கே.செல்வராஜிடம், துணைப் பதிவாளா் புகாா் அளித்தாா்.

அதனடிப்படையில் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி மல்லசமுத்திரம் சென்ற போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட சங்கத்தின் துணைத் தலைவா் தங்கவேலு உள்பட 7 பேரை கைது செய்தனா். தலைவா் பதவியில் இருந்த சபரி உள்பட 6 பேரை தேடி வந்தனா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும், முன் ஜாமீன் கேட்டும் சபரி உள்ளிட்ட 4 போ் மனுதாக்கல் செய்தனா். ஆனால், அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து, சனிக்கிழமை சபரி (29), பெரியசாமி (56), மகேஸ்வரி (45), சீனிவாசன் (49) ஆகியோரை வணிக குற்றப்புலனாய்வுப் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 11 போ் கைதாகியுள்ளனா். மேலும் இருவா் தலைமறைவாக உள்ளனா். இவ்வழக்கில் கைதான நான்கு பேரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் 2-இல் சனிக்கிழமை பிற்பகல் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com