மஞ்சள் ரூ. 78 லட்சத்துக்கு ஏலம்

ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 78 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.

ராசிபுரம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 78 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.

ஏலத்தில் விரலி மஞ்சள் ரகம் 1,105 மூட்டைகள், உருண்டை ரகம் 380 மூட்டைகள், பனங்காளி ரகம் 35 மூட்டைகள் என மொத்தம் 1,520 மூட்டைகள் ஏலத்துக்கு வந்திருந்தன. இந்த ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு விரலி மஞ்சள் குறைந்தபட்சம் ரூ. 8,099 முதல் அதிகபட்சம் ரூ. 10,030 வரை விலைபோனது.

இதுபோல உருண்டை ரகம் குறைந்தபட்சமாக ரூ. 7,449 முதல் அதிகபட்சமாக ரூ. 8,300 வரையும், பனங்காளி ரகம் ரூ. 16,402 முதல் அதிகபட்சமாக ரூ. 20,021 வரையும் விலைபோனது. மொத்தம் ரூ. 78 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com