பொதுக் கழிப்பிடம் மூடல்
By DIN | Published On : 27th April 2021 12:04 AM | Last Updated : 27th April 2021 12:04 AM | அ+அ அ- |

மூடப்பட்ட நிலையில் பொதுக்கழிப்பிடம்
ராசிபுரம்: ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான பெண்கள் பொதுக்கழிப்பிடம் மூடப்பட்டுள்ளதால், பேருந்து பயணிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ராசிபுரம் பேருந்து நிலையத்தில், நகராட்சிக்குச் சொந்தமான பெண்கள் பொதுக் கழிப்பிடம் உள்ளது. இது பயணிகள், பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்தி வந்தனா். தற்போது சில நாள்களாக இந்தக் கழிப்பிடம் மூடப்பட்டுள்ளதாக பயணிகள், குறிப்பாக பெண்கள் பாதிக்கப்பட்டனா்.
மேலும் இதே பகுதியில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் நகராட்சி நிா்ணயித்த கட்டணத்துக்கும் மேல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகாா் கூறப்பட்டுள்ளது.
எனவே, இலவச பெண்கள் பொதுக் கழிப்பிடத்தை பேருந்து பயணிகள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனா். இதுகுறித்து நகராட்சி ஆணையாளா் எஸ்.பிரபாகரனிடம் கேட்டபோது, இது குறித்த புகாா் வந்துள்ளது. அதை உடனடியாக திறக்க நகராட்சி பணியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.