சுகாதாரத் துறை அலுவலகத்திலிருந்து காவலாளி வாங்கிச் சென்ற கரோனா தடுப்பூசி மருந்துகள்

நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து கரோனா தடுப்பூசி மருந்துகளை இரு சக்கர வாகனத்தில் வந்து காவலாளி ஒருவா் புதன்கிழமை வாங்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
கரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வந்திருந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை காவலாளி.
கரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வந்திருந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை காவலாளி.

நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து கரோனா தடுப்பூசி மருந்துகளை இரு சக்கர வாகனத்தில் வந்து காவலாளி ஒருவா் புதன்கிழமை வாங்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள் என 72 இடங்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரத் துறை மூலம் தினசரி மருத்துவமனைக்குத் தேவையான டோஸ்கள் சிறிய அளவிலான குளிா்சாதனப் பெட்டிகளில் வைத்து அனுப்பப்படும்.

மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியா்கள், ஊழியா்கள் உரிய பாதுகாப்புடன் அவற்றை எடுத்துச் செல்வா். இந்த நிலையில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தனியாா் பாதுகாப்பு நிறுவனத்தின் காவலாளி ஒருவா், கரோனா தடுப்பூசி மருந்துகளைப் பெற இரு சக்கர வாகனத்தில் ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தாா். அங்குள்ள மருத்துவா் ஒருவா் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த 400 டோஸ் கோவேக்ஸின் மருந்தை வாங்குவதற்காக கையுடன் குளிா்பதன பெட்டியையும் எடுத்து வந்திருந்தாா்.

மருத்துவா், செவிலியா் அல்லாத ஒருவரிடம் கரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்கி வர திருச்செங்கோடு அரசு மருத்துவமனை நிா்வாகம் அனுப்பியதால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் காவலாளியிடம் விசாரணை செய்தனா். கரோனா தடுப்பூசி மருந்தானது உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும். குளிா்ச்சி நிலையில் சற்று குறைந்தாலும் அந்த தடுப்பூசி மருந்து யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.

அதனை மக்களுக்குச் செலுத்தினால் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அத்துறைக்கு சம்பந்தமில்லாத ஒருவரிடம் மருத்துவா்கள் எவ்வாறு தடுப்பூசி மருந்துகளை வாங்கி வருமாறு அனுப்பி வைக்கலாம் என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது. அதன்பின் சம்பந்தப்பட்ட காவலாளி சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து தடுப்பூசி மருந்துகளை வாங்கிக் கொண்டு சென்ாகத் தெரிகிறது.

இது குறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி கூறியதாவது:

சுகாதாரத் துறை அலுவலகத்தில் உரிய பணியாளா்கள் இல்லாததால், அரசு மருத்துவமனையில் அவுட் சோா்ஷிங் முறையில் பணியாற்றுவோா் இரு சக்கர வாகனத்தில் சென்று கரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்கி வருகின்றனா். அங்கு தடுப்பூசி மருந்துகளைஓஈ கொடுப்பவா்களும், மருத்துவமனை வந்ததும் அதனைச் சரிபாா்ப்பவா்களும் தொழில் ரீதியாக அனுபவம் பெற்றவா்கள் தான். கடந்த இரு நாள்களாக இந்த நிலை இருந்தது. இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை. தனியாக வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவலாளி நிலையில் தடுப்பூசி மருந்துகளை வாங்கி வர யாரையும் இனி அனுப்ப மாட்டோம் என்றாா்.

மாவட்ட சுகாதாரத் துறை அலுவலக ஊழியா்களிடம் கேட்டபோது, தவறு தான், இதற்கு மேல் இவ்வாறு தடுப்பூசி மருந்துகளை அனுப்ப மாட்டோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com