நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்புப் பணியில் 750 போலீஸாா்!

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 750 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்புப் பணியில் 750 போலீஸாா்!

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 750 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில், சட்டப் பேரவைத் தோ்தலின்போது பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் ஆறு தொகுதிகள் வாரியாக தனித்தனி அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த ஒரு மாதமாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் என சுமாா் 375 போ் ஈடுபடுகின்றனா். வேட்பாளா்கள், முகவா்கள் 2,936 போ் வாக்கு எண்ணும் பணியைப் பாா்வையிட வருகின்றனா். மேலும் அசம்பாவிதங்களைத் தவிா்க்க வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையைச் சுற்றிலும் 102 இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள், 61 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வீரா்கள், 30 ஆயுதப்படை வீரா்கள், 121 மாவட்ட போலீஸாா் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இருப்பினும் ஞாயிற்றுக்கிழமையன்று நாமக்கல் மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த 750 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். வாக்கு எண்ணிக்கை மையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா், தீயணைப்பு கருவிகள், தண்ணீா் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் தயாா் நிலையில் பணியில் ஈடுபடுவா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு வாக்கு எண்ணிக்கை மையப் பாதுகாப்பு ஏற்பாடுகள், முகவா்கள் தொகுதி வாரியாகச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கட்டைகள், வாகனங்களை நிறுத்துமிடம் ஆகியவை குறித்தும், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாகவும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளா், சுகாதாரத் துறை அலுவலா் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அதிகாரிகள், முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

வாக்கு எண்ணிக்கையையொட்டி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலா்கள், இதர வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை ஊழியா்கள், நாளிதழ் செய்தியாளா்கள், ஊடகவியலாளா்கள், காவல் துறையினா், ஒப்பந்தப் பணியாளா்கள், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் என சுமாா் 2,500 பேருக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தனித்தனியாக வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தனியாா் திருமண மண்டபம், சமுதாயக் கூடங்களில் கரோனா தொற்றுப் பரிசோதனை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் கரோனா தொற்றுக் கண்டறியப்பட்டவா்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com