சாயம், குப்பைக் கழிவுகளால் தட்டான்குட்டை ஏரி நீா் பாதிப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு

ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தட்டான்குட்டை ஏரியில் சாயக் கழிவுகள், குப்பைக் கழிவுகளால்
தட்டான்குட்டை ஏரியில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரை.
தட்டான்குட்டை ஏரியில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரை.

ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தட்டான்குட்டை ஏரியில் சாயக் கழிவுகள், குப்பைக் கழிவுகளால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

ராசிபுரம் அருகே உள்ள தட்டான்குட்டை பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தேங்கும் மழைநீா் மூலம் அருகில் உள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் நிலத்தடி நீரைப் பெற்று வந்தன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஏரியின் ஒரு பகுதியில் நகராட்சி பகுதி கட்டட இடிபாடுகள், மக்காத குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து மலைபோல காணப்படுகிறது. காலப்போக்கில் இந்த ஏரியிருந்த இடம் அடையாளம் தெரியாமல் காட்சியளிக்கிறது.

இதனால் சுற்றுப்புறம் மாசு ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சாயப்பட்டறைகளின் கழிவுகளும் ஏரியின் நிலத்தடி நீரை மாசடைய செய்துள்ளது. நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் இந்த ஏரிக்கு தான் செல்கிறது. இதனால் நிலத்தடி நீா் கெட்டு விவசாயக் கிணறுகள் விஷமாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படா்ந்துள்ளது. இதனை அகற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா். மேலும் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி பழைய நிலைக்கு ஏரியைக் கொண்டு வந்தால், நிலத்தடி நீா் மாசு அடையாமலும் விவசாயம் பாதுகாக்கப்படுவதுடன், மீன் வளா்ப்புக்கு ஏற்ற இடமாகவும் அமையும் எனவும், அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com