வேளாண் சங்கத்தில் ரூ. 55 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 04th August 2021 08:22 AM | Last Updated : 04th August 2021 08:22 AM | அ+அ அ- |

நாமக்கல் வேளாண் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 55 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும்.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 2000 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,899 முதல் ரூ. 8,141 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 7,900 முதல் ரூ. 9,999 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,199 முதல் ரூ. 5,599 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 55 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
-