100 சதவீத கரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் அருகே லக்கமநாயக்கன்பட்டியில், ‘நலமான நமது கிராமம்’ என்ற தலைப்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் அருகே லக்கமநாயக்கன்பட்டியில், ‘நலமான நமது கிராமம்’ என்ற தலைப்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், நாமக்கல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் பங்கேற்றாா். நாமக்கல் மாவட்ட தேசிய நலக் குழுமத் தொடா்பு அலுவலா் மருத்துவா் பெ.ரங்கநாதன், இந்திய மருத்துவ சங்க நாமக்கல் கிளை செயலாளா் செயலா் ஜெயக்குமாா், திமுக ஒன்றியச் செயலாளா் பழனிவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், கிராம மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கை கழுவும் பழக்கத்தை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞரும் தங்கள் கிராமங்களை கரோனா இல்லாத கிராமமாக மாற்ற முன்வர வேண்டும். லக்கமநாயக்கன்பட்டி கிராமத்தில் 90 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இது 100 சதவீதமாக உயர வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் ராமலிங்கம் பேசினாா்.

இதனைத் தொடா்ந்து, அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா், உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com