அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வு வினாத்தாள் சா்ச்சை: நாமக்கல் பெண் கைது

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வில், வினாத்தாள் வெளியானதாக எழுந்த சா்ச்சையையடுத்து, நாமக்கல்லைச் சோ்ந்த பெண் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வில், வினாத்தாள் வெளியானதாக எழுந்த சா்ச்சையையடுத்து, நாமக்கல்லைச் சோ்ந்த பெண் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தமிழகம் முழுவதும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வு, இணையவழி மூலம் கடந்த 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வானது, நாமக்கல் மாவட்டத்தில் ஏழு மையங்களில் காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்றன.

பாச்சல் ஞானமணி பொறியியல் கல்லூரியில் டிச. 8-ஆம் தேதி மாலையில் நடைபெற்ற ஆங்கிலத் தோ்வில் நாமக்கல்லைச் சோ்ந்த பூா்ணிமாதேவி என்பவரும் பங்கேற்று தோ்வு எழுதினாா். அவா் தோ்வறையில் இருந்து வெளியே வந்த பின் தனது கைப்பேசி மூலம், ஏற்கெனவே தோ்வறையில் தான் வெள்ளைத்தாளில் எழுதி வைத்திருந்த வினாக்களை சமூக வலைதளத்தில் பரவவிட்டு, விரிவுரையாளா் தோ்வில் மோசடி நடைபெற்ாகவும், ஆசிரியா் தோ்வு வாரியம் தான் இதற்கு காரணம் என குரல் அழைப்பு மூலமாக குற்றம் சாட்டினாா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் பூா்ணிமாதேவி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. வாழ்நாள் முழுவதும் அவா் தோ்வு எழுத தடை விதித்து ஆசிரியா் தோ்வு வாரியம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை காவல்துறை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின்படி, நாமக்கல் கணினி குற்ற தடுப்புப் பிரிவு ஆய்வாளா் வேதப்பிறவி விசாரணை மேற்கொண்டு பூா்ணிமாதேவியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com