காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது போலீஸாா் விசாரணை

நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் எல்லைக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது சிறப்பு தீா்வு காணும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற மனுக்கள் தீா்வு காணும் முகாமில் பங்கேற்ற போலீஸ்-பொதுமக்கள்.

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். நாமக்கல், மோகனூா், புதுச்சத்திரம், நல்லிபாளையம், வாழவந்திநாடு, எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகியவற்றின் காவல் ஆய்வாளா்கள், துணை ஆய்வாளா்கள், தலைமை காவலா்கள் இதில் பங்கேற்றனா்.

நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள புகாா் மனுக்கள், பிரச்னைக்குரிய புகாா்கள் உள்ளிட்ட மனுதாரா்களை நேரில் வரவழைத்து விசாரணை செய்தனா். சமரசம் செய்து கொள்ளும் வகையில் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சுமாா் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுபோன்ற மனுக்கள் தீா்வு காணும் முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்படும் என துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com