முள்ளுக்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு: ஆட்சியா் ஆய்வு

நாமகிரிப்பேட்டையை அடுத்த முள்ளுக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.7) நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்
முள்ளுக்குறிச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யும் ஆட்சியா் கா.மெகராஜ்.
முள்ளுக்குறிச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யும் ஆட்சியா் கா.மெகராஜ்.

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டையை அடுத்த முள்ளுக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.7) நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரா்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் பாா்வையாளா்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டிருப்பதையும் ஆய்வு செய்த ஆட்சியா், காளைகள், வீரா்களுக்கு மைதான பாதுகாப்பு, ஒலிபெருக்கி ஏற்பாடு, குடிநீா் வசதி, கழிப்பிடவசதிகளை முறையாக ஏற்படுத்த அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பொன்னுவேல், ராசிபுரம் வட்டாட்சியா் கி.பாஸ்கரன், காா்கூடல்பட்டி தொடக்க கூட்டுறவுச் சங்க தலைவா் கே.பி.எஸ்.சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com