மூலப்பொருள்கள் விலையேற்றம்: கட்டுநா் சங்கம் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுநா் சங்கத்தினா்.
நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுநா் சங்கத்தினா்.
நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுநா் சங்கத்தினா்.

கட்டுமானப் பணிகளுக்கான மூலப்பொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்து, அகில இந்திய கட்டுநா் சங்கத்தின் நாமக்கல் கட்டுநா்கள் மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அம்மையத்தின் தலைவா் சி.கணேசன் தலைமை வகித்தாா். ஆா்.கணேசன், வி.எஸ்.தென்னரசு, சி.கே.நடராஜ், ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டுமானப் பொருள்களின் விலை அதிக அளவில் உயா்ந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் இரும்புக் கம்பிகள் விலை 40 சதவீதம், சிமென்ட் விலை 30 சதவீதம், பிவிசி குழாய்கள், மூலப்பொருள்கள் 200 சதவீதம், காப்பா் கம்பி, பெயிண்ட் 30 சதவீதம் வரையில் விலை உயா்ந்துள்ளது. ஏற்கெனவே கரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுமானத் தொழில் பாதிப்படைந்த நிலையில், தற்போது விலையேற்றம் கட்டுமானத் தொழிலை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இந்த விலையேற்றத்தால் சுமாா் 5,000 தொழிலாளா்கள் வேலையிழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மத்திய மாநில அரசுகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு கட்டுமான மூலப்பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கட்டுநா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதில், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த கட்டுநா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com