ஆழ்துளைக் கிணறு அமைக்க நவீன வாகம் அறிமுகம்

ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக 230 குதிரை திறனுடன் கூடிய 10 கியா் தொழில்நுட்ப வாகனத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக 230 குதிரை திறனுடன் கூடிய 10 கியா் தொழில்நுட்ப வாகனத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரிக் வாகன உரிமையாளா் சங்கத் தலைவா் கந்தசாமி, லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் பாரி கணேசன் தலைமை வகித்தனா். 28 டன் எடையை சுமக்கும் வகையில் 10 கியா்களுடன் கூடிய வாகனம் மலைப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வாகனங்களை கொண்டு செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. 230 குதிரை சக்தியுடன் உள்ளதால் எளிதாக சகதியான நிலங்களில்கூட இந்த வாகனங்கள் சென்று வர முடியும். புதிய டாட்டா மோட்டாா் வாகனத்தை திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வாகன உரிமையாளா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com