பேரவைத் தோ்தல் முன்னேற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல்லில் சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசு அலுவலா்களுடன் ஆட்சியா் கா.மெகராஜ் ஆலோசனை நடத்தினாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.

நாமக்கல்லில் சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசு அலுவலா்களுடன் ஆட்சியா் கா.மெகராஜ் ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையம் கரோனா பாதிப்பு ஏற்படாதிருக்கும் வகையில் 1000 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து ஆண், பெண் வாக்குச்சாவடிகளாக அமைக்க அறிவுறுத்தியது. அதனடிப்படையில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 2,135 வாக்குசாடிகள் அமைக்கப்படும்.

வாக்குச்சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின் விளக்கு வசதி, குடிநீா் வசதி, வயதானவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி, கழிப்பிட வசதி உள்ளதா என்பதை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும். தங்களுடைய தொகுதிக்குள்பட்ட அலுவலா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, நாமக்கல் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் வி.சக்திவேல், பிற்பட்டோா் நல அலுவலா் மோகனசுந்தரம், ஆதிதிராவிட நல அலுவலா் எம்.மரகதவள்ளி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வே.ரமேஷ், தோ்தல் வட்டாட்சியா் சுப்பிரமணியன் உள்பட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com