வேளாண் சந்தையில் ரூ.10.61 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்திவேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.10.61 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

பரமத்திவேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.10.61 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

பரமத்திவேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் பரமத்திவேலூா் மின்னணு தேசிய வேளாண் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். அங்கு கொப்பரையின் தரத்துக்கு ஏற்ப மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கொண்டுவரப்பட்ட 7ஆயிரத்து 927 கிலோ கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ. 134. 96 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 120.89-க்கும், சராசரியாக ரூ. 127.69க்கும் விற்பனையானது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 8 ஆயிரத்து 956 கிலோ தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.132க்கும், குறைந்தபட்சமாக ரூ. 120க்கும், சராசரியாக ரூ. 128.18வுக்கும் விற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com