புத்தாண்டு: நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில், 2021-ஆம் ஆண்டு பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி, பின்னா் எண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், திரவியம் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு தங்கக் கவசம் சாத்துப்படி நடைபெற்றது.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல், பொது முடக்கம், வேலையிழப்பு, வருவாயின்மை போன்றவற்றால் மக்கள் பெரும் வேதனைக்கு ஆளாகினா். 2021-ஆம் ஆண்டு அதுபோன்று நிகழக்கூடாது, அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயா் சுவாமியை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதேபோல நாமக்கல் நரசிம்மா் சுவாமி கோயில், அரங்கநாதா் கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில்களிலும் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com